அஞ்சலி படம்…
பிரபலங்களை குழந்தைப் பருவ புகைப்படமாகப் பார்ப்பது மிகவும் அழகானது. அது நம்மை வெகுவாக ரசிக்கவும் வைக்கும். அந்த வகையில் இப்போது ஒரு குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்க்கவே துரு, துருவென அழகாக இருக்கும் இந்தக் குழந்தை இப்போது தமிழில் உச்ச நட்சத்திரமாகவும் உள்ளது. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
இ.ய.க்குனர் மணிரத்தினத்தின் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உண்டு. அவர் அதிகமாக பேசாவிட்டாலும் அவரது படங்கள் அதிகளவில் பேசப்படும். அவரது திரைப்படங்களும் மாறுபட்ட கதைகளத்தோடு இருக்கும்.
இ.ய.க்குனர் மணிரத்தினம் இ.ய.க்கி 1990 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தான் அஞ்சலி. முழுக்க குழந்தைகளை மையப்படுத்திய இந்த படம், அந்த ஆண்டின் சிறந்த படமாக இருந்ததோடு, இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த படத்தில் வரும் மூன்று குழந்தைகளில் அர்ஜூன் என்னும் கேரக்டரில் சிறுவனாக நடித்தது நடிகர் தருண் தான்.
தெலுங்கானாவைச் சேர்ந்த இவரது தந்தை சக்ரா பாணி ஓரியா மொழி நடிகராவார். இவரது தாய் ராஜமணி தெலுங்குத் திரையுலகில் நடித்துவந்தார். தருண், அஞ்சலி படத்தில் நடிக்கும்போது அவருக்கு 11 வயதுதான்! தொடர்ந்து அவர் மலையாளத் திரையுலகிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
தெலுங்கில் ‘நுவ்வே காவாலி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான தருண் தமிழிலும் உனக்கு 20 எனக்கு 18 ,
புன்னகை தேசம் உள்பட சில படங்களிலும் நடித்திருந்தார். இப்போது 36 வயதாகும் தருண் சினிமாவில் சாதித்துவிட்டுத்தான் கல்யாணம் என்பதில் உறுதியாக இறுக்கிறார்.