அண்ணியிடம் அத்துமீறிய கொழுந்தன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

444

கன்னியாகுமரி….

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சூரியகோடு அடுத்த குறிச்சி என்ற இடத்தை சார்ந்தவர் அபிலாஷ். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஆன்சி பீனா (26). இவர் தன் பிள்ளைகளுடன் குடும்ப வீட்டில் தங்கி வருகிறார்.

அபிலாஷிற்கு பவித்ரன் (26) என்ற உடன் பிறந்த சகோதரர் உள்ளார். இவரும் அதே குடும்ப வீட்டில் தான் தங்கியுள்ளார். இவருக்கு வெகு நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வருகிறது.

தினமும் இரவு வீட்டிற்கு குடித்து விட்டு தான் வருவார் என கூறப்படுகிறது. தினமும் இரவு வேளையில் குடித்துவிட்டு வந்து ஆன்சி பீனா படுத்திருக்கும் அறையை தட்டி அவரை எழுப்பி தகாத வார்த்தைகளில் திட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் ஆன்சி பீனா மற்றும் அவரது பிள்ளைகள் படுத்திருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பவித்ரன் அவரது அண்ணியிடம் அத்துமீறி உள்ளார்.

இதனால் அதிர்ந்து போன ஆன்சி பீனா கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவர் கத்துவதை தடுக்க பவித்ரன் அவரது அண்ணியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

இது சம்பந்தமாக ஆன்சி பீனா கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அந்தப் புகாரின் அடிப்படையில் பவித்திரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.