அதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்!!

3285

டாட்டூ மீதான மோகம்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கான ஒன்று டாட்டூ, மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துவமாக காட்டவும், மற்றவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் குத்தப்படுவது தான் டாட்டூ.

இதில் இருவகை உண்டு, ஒன்று குத்திய சில மணிநேரங்களில் அழிந்துவிடும், மற்றது நிரந்தரமானது. பச்சை நிற டாட்டூக்களில் குரோமிக் ஆக்சைடும், சிவப்பு நிற டாட்டூக்களில் பாதரசத்தின் அளவும் அதிகமாக இருக்கும்.

கார்பன், சைனா, மை, இந்தியன் இங்க் போன்ற மைகளை பயன்படுத்தி கருமை நிறத்தில் குத்துவார்கள், ரசாயன பொருட்கள் கலக்கப்படுகிறது. ஆழமான அதிக வண்ணங்களுடைய டாட்டூக்கள் ஆபத்தானவை, அரிப்பு, அலர்ஜி உட்பட சருமப் புற்றுநோய் வரை கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

முன்பெல்லாம் கால், கைகள், தோள்பட்டைகள் என டாட்டூ போட்டுக் கொண்ட நிலையில் தற்போது தான் விரும்பும் பகுதியில் போடுகின்றனர். டாட்டூ போடும்போது ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டிஸ்போசிபிள் ஊசியை பயன்படுத்தி டாட்டூஸ் வரைய வேண்டும்.

ஊசியை சுத்தம் செய்யாமல் மற்றவருக்கு அதையே பயன்படுத்தும் போது தடிப்பு, புண், கட்டி, பச்சை குத்தும் பகுதி அழுகுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, காசநோய், பால்வினை நோய்கள், ஹெச்ஐவி போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம். வைரஸ், பக்டீரியா தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொள்ளும் போது நரம்புகள் மீது ஊசி படுவதால், மெல்லிய ரத்தக் குழாய்கள் சேதம் அடையலாம்.
எனவே அனுபவம் நிறைந்த டாட்டூ கலைஞர்களிடம் குத்திக் கொள்வதே சிறந்தது, நிச்சயம் அவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.