அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகைகளின் பட்டியல்!!

722

திருமண வயதில் வித்தியாசம் இருக்க வேண்டும் என் நம் முன்னோர்கள் கூறியதற்கு, மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக முதிர்ச்சியை சார்ந்தவை ஆகும்.

பொதுவாக, ஆணை விட பெண்ணுக்கு 5 வயது வித்தியாசம் இருந்தால் போதுமானது. ஆனால் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட உலக பிரபலங்களின் பட்டியல் இதோ,

ஷாகீத் கபூர் – மீரா:34 வயதாகும் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது குறைவான 21 வயதாகும் மீராவை திருமணம் செய்துள்ளார்.

சயிப் அலி கான் – கரீனா:பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். 2 வளர்ந்த குழந்தைகளுக்கு தந்தையான சயிப் 44 வயதானவர். அவர் தன்னை விட 10 வயது குறைவான கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்தார்.

தர்மேந்திரா – ஹேமமாலினி:பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா(79) தன்னை விட 13 வயது குறைவான நடிகை ஹேமமாலினியை(66) காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இஷா, அஹானா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஸ்ரீதேவி – போனி கபூர்:1996 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனியை திருமணம் செய்துகொண்டார். 80 களில் ஸ்ரீதேவியின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, போனி கபூர் அவரை காதலித்துள்ளார். போனிக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், ஸ்ரீதேவியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் 8 வயது வித்தியாசம்.