அதுக்கு நமிதா தான் வேனும்: அடம்பிடிக்கும் இயக்குநர் !

583

டி.ஆர். இயக்க இருக்கும் அரசியல் சார்ந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க நமிதாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பல முகங்கள் கொண்டவர் டி.ராஜேந்தர்.

இவர், கடைசியாக இயக்கி நடித்த படமென்றால் அது வீராசாமி தான். அதன் பின்பு சென்ற வருடம் வெளியான கவன் படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், தற்போது அவர் படம் இயக்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அரசியல் நையாண்டியை குறிக்கும் இந்த படத்தில், காமெடி நடிகர்கள் பலர் நடிக்க இருக்கின்றனர். அவர்களுடன் முக்கிய வேடத்தில் நமீதா நடிக்க இருக்கிறார். டி.ஆரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாது, இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக, நடிகை நமிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். இந்த கதாப்பாத்திரத்திற்கு நமிதா தான் சரியான நடிகை. எனவே அவர் தான் வேனும் என அடம்பிடிக்கிறாராம் இயக்குநர் டி. ஆர்.