அத்தையை அடித்துக் கொன்ற 17 வயது சிறுவன் : வெளியான அதிரவைக்கும் காரணம்!!

1124

தேனி….

தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தில் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து வருபவர் அழகம்மாள். 65 வயது வரை திருமணம் செய்து கொள்ளாத அழகம்மாள் அவரது தம்பி கணேசனின் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்.

கணேசனுக்கு மணிகண்டன் மற்றும் விக்ரமன் என 2 ஆண் பிள்ளைகள் பிறந்து வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீரென கணேசன் இறந்து விட சிறிது நாட்களில் அவரது மனைவியும் காலமாகி உள்ளளார். இதனையடுத்து தம்பி மகன்களை தானே வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் அழகம்மாள்.

தாய் – தந்தைகளின் பாசம் கிடைக்கவில்லை என்ற எண்ணமே தெரியக்கூடாது என்பதற்காக மருமகன்கள் இருவரையும் தான் பெற்ற மகன் போலவே வளர்த்து வந்தார். கணேசனின் இளைய மகனான விக்ரமன் என்பவனுக்கு 17 வயதே ஆன நிலையில் சில மாதங்களாக மது பழக்கத்திற்க அடிமையாகியிருக்கிறான். அண்ணன் மணிகண்டனும், இதுகுறித்து அத்தை அழகம்மாளிடம் தெரிவிக்கவே, கடுமையாக திட்டி அடித்துள்ளார்.

இதையடுத்து காட்டிக் கொடுத்த அண்ணனையும் ஒருமுறை கடுமையாக திட்டியிருக்கிறான் தம்பி. இந்நிலையில் அழகம்மாள் வளர்த்து வந்த ஆடுகளில் ஒவ்வொன்றாக திருடிச் சென்று இன்னொருவரிடம் விற்று விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடித்து விட்டு வந்துள்ளான் இந்த சிறுவன் விக்ரமன்.

தம்பி மகன் கண் எதிரிலேயே நாசமாய் போவதை சகித்துக் கொள்ள முடியாத அழகம்மாள், விக்ரமனை கண்டித்தார். ஆனால் அத்தையின் பேச்சைக் கேட்டு கோபம் கொண்ட சிறுவன், ஆபாச வார்த்தைகளைப் பேசித் திட்டியதோடு, அருகில் கிடந்த கட்டையை எடுத்து அழகம்மாளின் தலையில் ஓங்கி அடித்தான்.

அடித்த அடியில் ரத்தம் வெள்ளத்தில் அத்தை இறந்து கிடப்பதைப் பார்த்தாலும், தலைக்கேறிய போதையில் அதே இடத்தில் படுத்து உறங்கினான் விக்ரமன். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், கொலை செய்யப்பட்ட அழகம்மாளின் உடலை மீட்டதோடு, சிறுவன் விக்ரமனையும் கைது செய்தனர்.

21 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியும், பல ஊர்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. புத்தகத்தை தூக்கும் வயதில் புட்டியைத் தூக்கியதால் எதிர்காலத்தை எண்ண வேண்டிய சிறுவன் தற்போது கம்பி எண்ணும் நிலைமை ஏற்பட்டுள்ளது.