அந்த இடத்தில் 6 மணிக்கு மேல் இருந்தால் மனிதர்கள் கல்லாக மாறிவிடுவார்களாம்…எங்கு தெரியுமா?

1010

ராஜஸ்தானில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை நேரங்களில் அலறியடித்துக்கொண்டு ஓடுகின்றனராம்.ஏனென்றால் அந்த கோயிலில் 6 மணிக்கு மேல் தங்கினால் அங்கு இருக்கும் மனிதர்கள் கல்லாக மாறி விடுவார்களாம்

என்னதான் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலும் வறட்சியாக காணப்பட்டாலும் இந்த கோயிலுக்கு செல்லும் பாதை கான்கிரிட் தளமிட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் வழிநெடுகிலும் பச்சை பசேலென்று செடி மரங்கள் உள்ளன.

காடுகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை நேரங்களில் மிகுந்த பயத்துடனே இந்த கோயில் வழிபடுகின்றனர்.
மாலை நேரங்களில் வழிபடும் பக்தர்கள் இரவு ஆவதற்குள் அதாவது 6 மணிக்குள் இடத்தை காலி செய்துவிடுகின்றனர். தப்பி தவறி கூட 6 மணிக்குமேல் இங்கு தங்குவதில்லை. ஏன் தெரியுமா?

இங்கு இரவு நேரங்களில் தங்குபவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த அதிர்ச்சியான அதிசயம் நடக்கிறதாம்.கோயிலில் தங்கக்கூடாது என்று தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். மீறி தங்கினால் அவ்வளவுதான். அவர்கள் சிலையாக மாறிவிடுகின்றனர். நம்பமுடியவில்லையா?

உள்ளூர் வாசியிடம் விசாரித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்ததாகவும், அவருக்கு இந்த மக்கள் பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றிவிட்டதாகவும் கூறினார்.மேலும் அந்த முனிவர் இந்த கோயிலில்தான் தற்போதும் இருக்கிறார் என்கின்றனர் வேறு சிலர் கூறிகின்றனர்.

இந்த கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. பழமைக்கும் கட்டிடத்துக்கும் பெயர்பெற்ற இந்த கோயில் தற்போது பயத்துக்கும் அமானுஷ்யத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.

இங்குள்ள சுவர்கள் , தூண்கள் என அனைத்திலும் மனித உருவங்களைக் கொண்ட சிலைகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு மனிதனாக இருந்து கல்லாக உருமாறியதாகவே தோற்றமளிக்கிறது.

இந்த கோயிலின் கட்டிடக் கலையை ரசிப்பதற்காகவே தினமும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நீங்களும் ராஜஸ்தான் போனா மறக்காம போகவேண்டிய இடம் இந்த கிரடு.ஆனால் 6 மணி ஆகுறதுக்குள்ள வெளியே வந்துவிடுங்கள்.