யாஷிகா ஆனந்த்..
இருட்டறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். வயதுக்கு மீறிய கவர்ச்சி மற்றும் அடுத்தடுத்த அடல்ட் படங்கள் காரணமாக யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இதற்கிடையில் கோர விபத்து ஒன்றில் சிக்கிய யாஷிகா ஆனந்த் அதில் இருந்து உயிர் பிழைத்ததே அதிசயம் என்று தான் கூற வேண்டும்.
பல மாதங்கள் படுக்கையில் இருந்த யாஷிகா தற்போது தான் குணமாகி மீண்டும் மீடியாக்களில் தலைகாட்ட தொடங்கி உள்ளார். மேலும் தான் மீண்டும் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என்பதை உணர்த்தும் விதமாக படு கவர்ச்சியாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள் இருப்பினும் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வரும் யாஷிகா தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் யாஷிகா வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய யாஷிகாவிடம் பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்டாக என்ட்ரி கொடுக்க திட்டம் இருக்கிறதா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யாஷிகா, “ஆம் என்னை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தார்கள்.
ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் பண்ண முடியாது. மேலும், நான் 18 வயது இருக்கும் போது பிக் பாஸுக்கு போனேன். அந்த ஒரு இடைவெளியும் உள்ளது. எனவே நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மேலும், இனியும் நான் எந்த லவ் ஸ்டோரியிலும் இருக்க விரும்பவில்லை” என கூறியுள்ளார்.