அன்று எருமை மேய்த்தவர்… இன்று சாதனை மனிதன்!!

828

துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் ஜாம்பவானான சித்து ராய் ஒரு காலத்தில் எருமை மேய்த்தவர் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு காலத்தில் நேபாளத்தின் மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தும், வயல் வேலைகள் செய்தும் வாழ்ந்து வந்த ஜித்து ராய், தனது 20வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

அதற்குமுன் துப்பாக்கி பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வதை தன் கனவாகக் கொண்டிருந்த ராய், ஒருமுறை பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கலந்து கொள்ள வருகையில் அது இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு இடமாக இருந்திருக்கிறது. இருப்பினும் அதில் விண்ணப்பித்த ராய்க்கு இந்திய ராணுவத்தில் வேலை கிடைத்திருக்கிறது.

துப்பாக்கி சுடுதலில் ராய்க்கு பெரிதாக ஆர்வம் இல்லை அவரது மூத்த அதிகாரியின் வலியுறுத்தலின் பேரில் துப்பாக்கி பயிற்சி பெற லக்னோவில் உள்ள மோ எனும் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.

சரியாக சுடத் தெரியாததால் ஆரம்பத்தில் இரண்டு முறைகள் ராணுவ பயிற்சி முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்ட ராய், தன் தொடர்முயற்சிகளால் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தார். பின்னர் தீவீர பயிற்சி மேற்கொண்ட ராய், அன்றிலிருந்து க்ளாஸ்கோ, காமன் வெல்த் போன்ற போட்டிகளில் இந்தியாவிற்கு பலமுறை தங்கம் வாங்கித் தந்திருக்கிறார்.

உலகக் கோப்பை போட்டிகளிலும் தொடர்ந்து தங்கம் வென்ற ராய் , தனக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருது விழாவின் போதுதான் அவர் குடும்பத்தார்க்கு ராய் ஒரு சர்வதேச விளையாட்டு வீரர் என்பது தெரிய வந்திருக்கிறது.

விதி சிலரின் வாழ்வை நொடிநேரத்தில் மாற்றிவிடுகிறது. இல்லாவிட்டால் எங்கோ நேபாளத்து மலைகளில் மாடு மேய்த்த ராய் தனது சீரிய முயற்சி மற்றும் பயிற்சிகளினால் இன்று இந்தியாவிற்குத் தங்கம் வாங்கித் தந்திருக்க முடியாது தானே?