அப்பா வயது நபரை காதலித்து திருமணம் செய்த அழகிய இளம்பெண்: சந்தித்த பிரச்சனை!

675

ஜார்ஜியாவில் அப்பா வயது நபரை இளம் பெண் திருமணம் செய்த நிலையில் தம்பதியை பார்க்கும் பலரும் அவர்களை தந்தை – மகள் என்று நினைத்து விடுகிறார்கள்.

கோர்ட்னி தோர்ண்டன் (25) என்ற பெண்ணுக்கு வான் (57) என்ற நபருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் போன் மூலம் இருவரும் பேசிய நிலையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோர்ட்னி, வானை காதலிப்பதாக கூறியுள்ளார்.ஆனால் தனக்கு 57 வயதாகிறது எனவும், ஏற்கனவே திருமணமாகி நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் வான் கூறியுள்ளார்.

ஆனாலும் இந்த விடயங்களால் வான் மீதான தனது உண்மை காதலை கோர்ட்னி மாற்றி கொள்ளவில்லை.இதையடுத்து கடந்த 2016-ல் தனது தந்தை வயதுடைய வானை கோர்ட்னி திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.இது குறித்து கோர்ட்னி கூறுகையில், வானின் நான்கு பிள்ளைகளில் மூவர் என்னை விட வயதில் அதிகமானவர்கள்.

ஆனாலும் நான் அவர்களுக்கு சித்தி முறை தான் என்பதை உணர்ந்திருக்கிறேன், எங்களை பொதுவெளியில் பார்க்கும் பலர் அப்பா – மகள் என நினைத்து விடுகிறார்கள், ஆனால் இதை பற்றி நான் கவலைப்படுவதில்லை.

என்னை வான் நன்றாக பார்த்து கொள்கிறார், அதுவே மகிழ்ச்சியான விடயம் என கூறியுள்ளார்.