அமெரிக்க உளவுத்துறையில் நுழையும் ரோபோக்கள்: இனி மனிதர்களுக்கு வேலை இல்லை!

500

அமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intelligence தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.Artificial Intelligence என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதன் மூலம் ரோபோக்கள் தானாக சிந்திக்கும் திறனைப் பெறும்.

இந்நிலையில், அமெரிக்காவில் CIA நடத்தும் கண்காணிப்பு பணிகளில் இனி மனிதர்களுக்கு பதிலாக, Artificial Intelligence ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த பணியில் இருப்பவர்கள், அன்றாடம் நடக்கும் விடயங்களின் வீடியோக்களை ஆராய்வது, சி.சி.டி.வி கமிராக்கள் மூலம் பதிவாகும் வீடியோக்களில் குற்றவாளிகளை கண்டறிவது போன்ற வேலைகள் செய்து வந்தனர்.

தற்போது இவர்களின் இந்த வேலையை Artificial Intelligence ரோபோக்கள் செய்ய உள்ளன. ஏற்கனவே இந்த பணியில் இருக்கும் அதிகாரிகள், வேறு நாட்டிற்கு சென்று மறைந்து வாழும் உளவாளி வேலைகளை மட்டுமே இனி செய்வார்கள் என, CIA அமைப்பின் அறிவியல் குழு துணை இயக்குனர் டான் மேவ்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வகை ரோபோக்களை உருவாக்கும் பணியில் CIA களமிறங்கியுள்ளது. இது குறித்து CIA தரப்பில் கூறுகையில், ‘பெண்டகன் உதவியுடன் இன்னும் சில மாதங்களில் ரோபோக்கள் உருவாக்கப்படும்.அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி அளிக்கப்பட்டு இவ்வருடத்தின் இறுதிக்குள் இந்த ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படும். மனிதர்களின் முகங்களை இந்த ரோபோக்கள், மனிதர்களை விட வேகமாக சோதனை செய்து முடிவுகளை ஆராயும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரோபோக்களை ராணுவ தளவாடங்களிலும் பணிக்கு அமர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இவை, வேவு பார்க்கும் வேலையை தலைகீழாக செய்து, யாராவது வானத்தில் இருந்து, ஆளில்லா ட்ரோன் வகை கமிராக்களில் வேவு பார்க்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.