அமெரிக்க பெண்ணை 6 வாரம் டார்ச்சர் செய்த 3 ஈக்கள் : பின்னர் ஏற்பட்ட சம்பவம்!!

271

டெல்லி….

அமேசான் காட்டுக்கு சென்ற பெண் ஒருவர் உடலில் உயிருடன் இருந்த 3 ஈக்களை இந்திய டாக்டர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.

சுற்றுலா பயணியான அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இவர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே அவரின் வலது கண்ணில் இமை வீக்கம், சிவந்து போதல், அரிப்பு தன்மை போன்ற அறிகுறிகள் கடந்த ஒன்றரை மாதமாகவே இருந்துள்ளது.

இதுகுறித்து இந்தியா வருவதற்கு முன்னே, அமெரிக்காவில் மருத்துவர்களிடம் பரிசோதித்ததில், அவர்களால் எதனால் இந்த அறிகுறிகள் உள்ளது என கண்டறிய முடியவில்லை எனக் கூறியுள்ளனர். அதோடு, நோய் அறிகுறியின் அடிப்படையில் அப்பெண்ணுக்கு சிகிச்சையும் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா வந்த அமெரிக்க பெண்ணும் மீண்டும் தொடர்ந்து கண் இமைக்குள் அவ்வபோது ஏதோ அசைவது போன்ற உணர்வு ஏற்பட்டதுள்ளது. அப்போது, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் உணர்வு கடந்த 6 வாரங்களாக இருப்பதாகவும், அவர் அமேசான் காடுகளுக்கு சென்று வந்த பின்பு தான் இந்த உணர்வு இருப்பதாகவும் டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் பரிசோதனை முடிவில், அவரது கண்ணில் அரிதான மியாசிஸ் எனப்படும், மனிதர்கள், பிற பாலூட்டிகளில் பரவும் ஒட்டுண்ணி வகையை சேர்ந்த பெரிய அமெரிக்க ஈக்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சுற்றுலா பயணியான அந்த பெண் அமேசான் காடுகளுக்கு சென்று வந்த போது, இந்த ஈக்கள் உயிருடன் அவருடைய தோலை ஊடுருவி உள்ளே சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, டாக்டர்கள்அவருக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் 10-15 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்து, வலது மேல் கண்ணிமை, கழுத்தின் பின்புறம் மற்றும் வலது முன்கை ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய 2 செமீ நீளம் அளவுள்ள மூன்று ஈக்களை அகற்றியுள்ளனர்.

இந்த ஈக்களால் தான் அவருக்கு மூக்கு, முகத்தை சுற்றிய பகுதிகளில் அரிப்பு போன்றவை ஏற்பட்டிருக்கிறது. அதோடு, இந்த ஈக்களை அகற்றாமல் விட்டால், நாளடைவில் திசுக்களில் கணிசமான அழிவை ஏற்படுத்தியிருக்கும் எனவும், சில நேரங்களில் இது மூளைக்காய்ச்சல், மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.