அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் நிறுவன தலைவர்கள் யார் தெரியுமா?

1012

இந்தியாவில் பெரும் பணக்கார நிறுவனராக அம்பானி இருக்கும் நிலையில், அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நிறுவன தலைவர்கள் யார் என்று பார்ப்போம்.

இந்தியாவில் பல நிறுவனங்களை நடத்தி வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கும் இவரது ஆண்டு சம்பளம் 15 கோடியாகும்.

இந்நிலையில், இவரை விட அதிக சம்பளம் பெறும் நிர்வாக இயக்குநர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

A.M.நாயக்:L & T நிறுவனத்தின் குழு செயல் தலைவர் ஏ.எம்.நாயக். இவர், கடந்த 2017ஆம் நிதியாண்டில் ரூ.40.87 கோடியை சம்பளமாக பெற்றார்.

சுனில் மிட்டல்:பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல். இவர் கடந்த 2017ஆம் நிதியாண்டில் ரூ.30.10 கோடியை ஊதியமாக பெற்றார்.

Guenter Butschek
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர், கடந்த 2017ஆம் நிதியாண்டில் ரூ.22.55 கோடியை சம்பளமாக பெற்றார்.

Y.C.தேவேசவர்
ITC நிறுவனத்தின் தலைவர் Y.C.தேவேசவர். இவர் சந்தை மூலதனத்தில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளினார்.இவர், கடந்த 2017ஆம் நிதியாண்டில் ரூ.21.17 கோடியை வருமானமாக பெற்றார்.

 

 

நிகில் மேஸ்வானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு வகிப்பவர் நிகில் மேஸ்வானி. இவர் 2018ஆம் நிதியாண்டில் ரூ.19.99 கோடியை சம்பளமாக பெற்றார்.

ஹிடல் மேஸ்வானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் சுத்திகரித்தல் பிரிவின் செயல் இயக்குநர் ஹிடல் மேஸ்வானி. இவரது ஆண்டு வருவாய் ரூ.19.99 கோடியாகும்.