அம்மாவாக போகிறார் சானியா மிர்சா! குவியும் வாழ்த்துகள்!!

485

புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விரைவில் அழகான குழந்தையை பெற்றெடுக்கப் போகிறார்.இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் அணி வீரரான சோயப் மாலிக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் விரைவில் பெற்றோராகப் போவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.மிக அழகான அந்த புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட சானியா மிர்சா, தங்களுடைய குழந்தையின் பெயருடன் மிர்சா மாலிக் என துணைப்பெயர் வைக்கப்படும் என்றும், பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.