அம்மா ஸ்ரீதேவிக்காக முதன் முறையாக ஜான்வி கபூர் செய்யப் போகும் செயல்: என்ன தெரியுமா?

565

சோனம் கபூர் திருமணத்தில் அம்மாவின் பாடல்களுக்கு ஜான்வி கபூர் நடனம் ஆடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.போனி கபூரின் சகோதரரான அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் திருமணம் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. சோனம் கபூர் இந்திய தொழிலதிபர் Anand Ahuja-வை கரம் பிடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த திருமணத்திற்கு போனி கபூரின் மகளும் வளர்ந்து வரும் நடிகையுமான ஜான்வி கபூர்(21) தன் அம்மாவின் பாடல்களுக்கு நடனமாடவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் ஜான்விகபூர் நடனமாடியதில்லை, தன் அம்மாவிற்காக முதன் முறையாக அம்மா நடித்திருந்த படங்களிலிருந்து Mere Haathon Mein Nau Nau Chudiyan மற்றும் Kisi Ke Haath Naa Aayegi Yeh Ladki என்ற பாடல்களுக்கு நடனமாடவுள்ளார்.

திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி துபாய் சென்றிருந்த போது மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர், குஷிகபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் தன் அம்மாவின் மரண செய்தியை கேட்டு பட பிடிப்பு தளத்தில் கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.