கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கையின் முடிவு முழுதாக வெளிவருதற்குள் வெற்றியை கொண்டாடிய பாஜக கட்சியினரை நெட்டீசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.
கர்நாடகாவில் 222 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. ஆரம்பத்தி இருந்தே முன்னிலையில் இருந்த பாஜக ஒரு கட்டத்தில் ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்களை அசால்ட்டாக எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் ஓட்டு எண்ணிக்கைகான முடிவுகள் வருவதற்குள் பாஜக-வினர் பட்டாசு கொளுத்தி, இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
ஒரு சில தலைவர்கள் பாஜகவுக்கு வாழ்த்துக்கள் வேறு தெரிவித்தனர். இப்படி சென்று கொண்டிருந்த ஓட்டு எண்ணிக்கை பிற்பகலில் அப்படியே மாறியது.
அசுரவேகத்தில் முன்னிலையில் வந்த பஜகா கடைசி கட்டத்தில் தடுமாறியது. இதனால் தற்போது வரை பாஜக 105 இடங்களிலும், பஜாக 76 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 112-இடங்கள் வேண்டும். ஆனால் பஜாகவிற்கோ 106 இடங்கள் தான் உள்ளது.
இதனால் அந்தக்கட்சி தனியாக ஆட்சி அமைக்க முடியாது, இதனால் காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தருவதாக தெரிவித்ததால், தற்போது கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கவுள்ளது.
இதனால் வெற்றி பெறுவதற்கு முன்பே பாஜகவினர் வெற்றியை கொண்டாடியதால், அவர்களை நெட்டீசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.