அவளிடம் பேசாதே…. தோழியிடம் கூறிய தன்பாலின ஈர்ப்பாளர் பெண் : பின்னர் நடந்த சம்பவம்!!

1062

கர்நாடக…..

கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது சக மனைவியை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் தாவணகெரெ டவுன் வித்யாநகர் அருகே ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இதில் உள்ள தங்கும் விடுதியில் சிக்மகளூர் மாவட்டம் கடூரைச் சேர்ந்த பெண்ணொருவரும், தாவணகெரேவைச் சேர்ந்த பெண்ணொருவரும் படித்து வருகின்றனர்.

இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிய நிலையில் தன்பாலின உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் தனது தோழி பேசுவதைப் பார்த்து கோபமடைந்த மாணவி, சக மாணவியை கண்டித்துள்ளார்.

ஆனால், அவர் கூறியதைக் கேட்காத தோழி, அப்பெண்ணுடன் பேசுவதை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி தன் காதலியை பிளேடால் சரமாரியாக உடலின் பல இடங்களில் வெட்டியுள்ளார்.

வலி தாங்க முடியாமல் மாணவி அலறியதால், பிற மாணவிகள் அங்கு ஓடி வந்தனர். இதனை கவனித்த பிளேடால் அறுத்த மாணவி தனது கையையும் வெட்டிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், பிளேடால் அறுத்த மாணவியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.