வேலுார்…
பெண் வேடமிட்டு 19 வயதுடைய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.
வேலுார் சைதாப்பேட்டை மெயின் சாலையில், நேற்று இரவு 10 மணியளவில் முகத்தை மூடியபடி பெண் போல ஒருவர் நடந்து சென்றார்.
ஆனால், அவர் நடந்து சென்ற விதம் ஆண் போல காட்டியதால் திருடன் என நினைத்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து அங்குள்ள மின்சார கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பின் வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, அவனை விசாரணை செய்ததில், அவர் வேலுார் ஓல்டு டவுனைச் சேர்ந்த அன்பழகன், 28. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி என தெரியவந்தது. மேலும், இவனுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளான். அந்த பெண்ணை ரகசியமாக சந்தித்து பேசுவதற்காக தினமும் இரவில் பெண் வேடத்தில் பர்தா அணிந்த கொண்டு சென்று அவரை சந்தித்து பேசி வந்துள்ளான்.
பர்தா உடையில் அவர் வந்தது அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.
இதனால், அவனை போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.