ஆடைகளை கிழித்து இளம்பெண்ணை ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் : பதறவைக்கும் வீடியோ!!

614

டெல்லி….

இந்தியாவில் இளம்பெண் ஒருவரின் ஆடைகளை கிழித்து, தலை முடியை வெட்டி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக பெண்களே அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கஸ்தூரிபா நகரில் சட்டவிரோத மதுகடத்தல் கும்பல் 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனை அங்கிருந்த பெண்கள் கைதட்டி ஆண்களை உற்சாகப்படுத்தியதாகவும் இந்த கொடூரத்திற்கு பிறகு அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்தது, மொட்டை அடித்து முகத்தில் கருப்பு பெயிண்ட்டை பூசி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பெண்களை பொலிஸ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறியதாவது, எனது சகோதரியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு என் சகோதரி தான் காரணம் என்று கூறி இவ்வாறு கொடுமை செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.