ஆலியா பட், ரன்பிர் காதலில் விழுந்தது இப்படித்தான்! – வெளியான புதிய தகவல்!!

692

நடிகை சோனம் கபூர் திருமணத்தில் ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் கைகோர்த்து வந்ததால் அவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. இதுபற்றி முதல் முறையாக வாய்திறந்துள்ள ரன்பிர், தான் ஆலியாவை டேட்டிங் செய்து வருவதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் காதல் எப்படி மலர்ந்தது என தகவல் வெளியாகியுள்ளது. ஆலியா-ரன்பிர் இருவரும் ஒன்றாக ப்ரம்மாஸ்திரா படத்தின் ஷூட்டிங்கிற்காக பல்கேரியா சென்றுள்ளனர். அப்போது மிக நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர்.

அதன் பிறகு இருவரும் அடிக்கடி ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளனர், நட்பு காதலாக மாறியுள்ளது. விரைவில் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.