ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

294

மொராக்கோ…..

மொராக்கோவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவனை மீட்க ஊழியர் ஒருவர் தமது வெறும் கைகளாலையே குழி தோண்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போன நிலையில், மூன்று நாட்கள் தொடர்ந்து தமது வெறும் கைகளாலையே ஊழியர் ஒருவர் குழி தோண்டி முயற்சித்துள்ளதை பாராட்டி அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

100 அடி கொண்ட கிணற்றில் விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் ரேயனை மீட்க 5 நாட்கள் போராடியும் உயிருடன் மீட்க முடியாமல் போனது.

இந்த மீட்புப்பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் Bwa Sahraoui என்பவர் தமது வெறும் கைகளால் குழி தோண்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வர, அவர் அப்பகுதி மக்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.

சுமார் 20 மணி நேரம் தொடர்ந்து ஓய்வின்றி தமது வெறும் கைகளால் Bwa Sahraoui குழி தோண்டியுள்ளார். அவருக்கு கடவுள் அனைத்து உதவிகளையும் செய்யட்டும் என மக்கள் மனதார வாழ்த்தியுள்ளனர்.