இணையத்தில் வைரலாகும் பூஜா ஹெக்டேவின் கலிஃபோர்னியா புகைப்படங்கள்!!

79

பூஜா ஹெக்டே..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ஓகா லைலா கோசம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். சமீபத்தில் ராதேஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் சரியான பெயர் அவருக்கு அமையாமல் போனது.

தொடர் தோல்வி படங்களால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து படங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டே போவதால் அவரின் மார்க்கெட்டும் சரிய தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகயிருக்கும் பூஜா ஹெக்டே, பல மாதமாக ஆள் அடையாளம் தெரியாமல் இருந்தார். தற்போது கலிஃபோர்னியாவுக்கு சென்று அங்கு எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.