“இதுவல்லவோ மாமியார் மருமகள்”… நெகிழ வைக்கும் வீடியோ பதிவு!!

813

மாமியார் மருமகள்…

பொதுவாக இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தள பக்கங்களில், சிறுசு தொடங்கி பெருசு வரை என அனைவரும் தங்களின் நேரத்தை கழித்து வருகின்றனர்.

அப்படி நாம் நேரத்தினை செலவிடும் போது, காண கிடைக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அன்றைய தினத்தில் ட்ரெண்டிங்கில் ஒன்றாக கூட இருக்கும்.

இவற்றுள் சில வீடியோக்கள், தவறான வழிகளில் இருந்தாலும், பெரும்பாலான வீடியோக்கள், மனதைக் கவரும் வகையில் தான் அமைந்திருக்கும். அந்த வகையில், தன்னுடைய மருமகளை மகள் போல பாவித்து, மாமியார் கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, மாமியார் – மருமகள் என்றாலே, சண்டை போடுவதாக தான் வெளியே ஒரு கருத்து உள்ளது. ஆனால், இந்த வீடியோவில் வரும் மாமியார் – மருமகளோ, அப்படியே வேறு பக்கம். ஊருக்கு கிளம்பும் மாமியார் ஒருவர், தனது கர்ப்பிணி மருமகள் அருகே வந்து உட்கார்ந்து, பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, மருமகளிடம், உனக்கு ஏதாவது ஒன்று என்றால், நான் மறுநாளே ஓடி வந்து விடுவேன் என கூறுகிறார்.

பத்திரமாக இருக்க வேண்டும் என கூறி, மருமகளுக்கு முத்தம் ஒன்றையும் கொடுக்கிறார் அந்த மாமியார். மேலும், கர்ப்பமாக இருக்கும் மருமகள், எப்படி எல்லாம் இருக்க வேண்டுமெனவும் மாமியார் அறிவுறுத்துகிறார். இதன் பிறகு, கடைசியில் கிளம்பும் நேரத்திலும் மருமகளின் பாதுகாப்பினை தான் மாமியார் மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறார்.

கடைசியில், கோவிலுக்கு சென்று விட்டு ஒரே நாளில் ஓடி வந்து விடுவேன் என்றும் சொல்கிறார். அப்படி மாமியார் – மருமகள் அன்பாக பேசும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.