இது என் கணவர் கிடையாது! விமான விபத்தில் பலியான விமானியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத மனைவி!!

299

கேரள விமான விபத்தில்…

கேரள விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியின் மனைவி, கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் சிக்கியதால், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்திருப்பவர்கள் அனைவரும் கோழிக்கோட்டின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா இறந்த செய்தியை, அவரின் மனைவியான மேகாவிடம் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

ஏனெனில், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும், இன்னும் ஓரிரு வாரங்களில் குழந்தை பெற்றுவிடுவார் என்பதால், இந்த சோக செய்தி அவருக்கு கடும் துயரத்தை ஏற்படத்தால், இது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற பயத்தில் உறவினர்கள் கூறாமல் இருந்து வந்தனர்.

ஆனால், மேகாவுக்கு கணவர் இறந்த விஷயம் எப்படியோ தெரிந்து போனதால், முற்றிலும் சுய நினைவு இழந்தது போல் காணப்பட்டார். இதையடுத்து அகிலேஷ் ஷர்மாவின் உடல் கேரளாவில் இருந்து, உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது தனது கணவர் உடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியைப் பார்த்து யார் இவர் என்று கூறி, தனது கணவர் இறந்து போனதை நம்பமுடியாமல் அழுது புலம்பினார்.

மேலும், இது அகிலேஷ் அல்ல. அவராக இருக்க முடியாது. நான் பிரசவம் பார்க்கவுள்ள மருத்துவமனையில் அகிலேஷ் இருக்கிறார். நான் அங்கே போக வேண்டும் என்று அழுது அடம் பிடித்தார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்தனர். மருத்துவ குழு ஒன்று மேகாவின் உடல்நிலையை கண்காணித்தப்படி உள்ளனர்.

அகிலேஷ் ஷர்மாவின் மைத்துனர் விஜய், ஆகஸ்ட் 21 முதல் மனைவியை உடனிருந்து கவனிப்பதற்காக அகிலேஷ் விடுப்பு கோரியிருந்தார். நாங்கள் அவரை கடைசியாக வீடியோ காலில் பார்த்தோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.