இந்தியாவை உலுக்கி வரும் மற்றொரு புதிய வைரஸ் : கொரோனா நோயாளிகள் 1000 பேரின் கண்கள் நீக்கம்!!

477

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் உலுக்கி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை வைரஸ் காரணமாக சுமார் 1000 கொரோனா நோயாளிகளின் கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் நாள் தோறும் சுமார் 2 ஆயிரம் போர் வரை உயிரிழந்து வருகின்றனர்,

லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவை தொடர்ந்து, இந்தியாவை கருப்பு பூஞ்சை வைரஸ் மிரட்டி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் கண்கள் அகற்றப்பட்டுள்ளது,மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சதவீத நோயாளிகள் ஒன்று அல்லது இரண்டு கண்களை அகற்றியுள்ளனர். அரிதினும், அரிதான இந்த ஆபத்தான நோயை mucormycosis கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான கொண்ட மக்களையே அதிகம் தாக்கும், இந்த நோயின் அறிகுறிகளாக, மூக்கின் மீது கருப்புமாக நிறமாற்றம், கண்பார்வை குறைபாடு, மார்பு வலி, சுவாச சிரமங்கள் மற்றும் இருமல் போன்றவை ஆகும்.

ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் மருத்துவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், இந்த கருப்பு பூஞ்சை வைரஸால், அவர்கள் மேலும் கடும் அழுத்ததிற்குள்ளாகியுள்ளனர்.

மேற்கு மாநிலமான குஜராத்தில், இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ளதால், இதற்காக சிறப்பு வார்டுகளை உருவாக்கியுள்ளது. வடமேற்கு மாநிலமான ராஜஸ்தான் இதை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது.

இந்த நோயை முதலில் ஆண்டுக்கு, மருத்துவர்கள் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு வழக்குகளைப் பார்ப்பார்கள். இப்போது, ​​அவர்கள் ஒரு நாளைக்கு ஆறு நோயாளிகளை பார்த்து வருகின்றனர்.

இந்த நோய்க்கு amphotericin B என்ற மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. நோயின் தீவிரத்தை பொறுத்து, இந்த நோய் ஒரு நோயாளிக்கு 60 முதல் 100 ஊசி வரை தேவைப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.