இந்த 1028 கிராமங்களில் கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கவில்லை : சுவாரஸ்சிய தகவல்!!

263

1028 கிராமங்களில்…

இந்தியாவில் இருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை எட்டிக் கூட பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியா நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதுடன், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகிலே கொரோனாவால் மோசமான பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதே இந்திய நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலையால் யாரும் பாதிக்கப்படவில்லையாம்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், இதுவரை கொரோனா இரண்டாம் அலை எட்டிக் கூடப்பார்க்கவில்லை.

1,028 கிராமங்கள் எதிலும் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை. எனவே, கட்டாக் மாவட்ட நிர்வாகம் இந்த கிராமங்களை பச்சை மண்டலங்களாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் இந்தக் கிராமங்களில் மிகச் சிறப்பான பின்பற்றப்படுவது மட்டுமின்றி கிராம நிர்வாகங்கள் கண்காணித்து வருவது தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.