பெங்களுருவில்…..
ஏ.டி.எம் மெஷின் அறிமுகப்படுத்தபின்னர் வாங்கி தொடர்பாக செயல்முறைகளில் அது பெரும் புரட்சி ஏற்படுத்தியது. தற்போது gpay, phonepe போன்ற செயலிகள் வந்த பின்னர் கூட ஏ.டி.எம் மெஷினின் தேவை இன்னும் குறையவில்லை.
இந்த நிலையில் இந்தியாவின் ஐ.டி துறையின் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களுருவில் எப்போதுவேண்டுமானாலும் இட்லி கொடுக்கும் ஏ.டி.எம் மெஷின் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை பிரபலமான உணவாக இட்லி இருக்கும் நிலையில், எந்த நேரத்திலும் அதனை பெரும் வகையில் இந்த இட்லி ஏ.டி.எம் மெஷின் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இட்லி ஏ.டி.எம் மெஷினில் பொருத்தப்பட்டுள்ள QR Code- ஐ ஸ்கேன் செய்து அதில் நமக்கு தேவையான இட்லி மற்றும் சட்னியை தேர்வு செய்தால் 2 நிமிடத்தில் சூடான இட்லி சாம்பார் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இட்லி ஏ.டி.எம் மெஷின் 12 நிமிடத்தில் 72 இட்லிகளை சுட்டுத் தருமாறு உருவாக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் எந்த நேரத்திலும் இட்லி கிடைக்கும் வகையில் இந்த இட்லி ஏ.டி.எம் மெஷினை உருவாக்கியுள்ளது.
பெங்களூரில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இட்லி ஏ.டி.எம் மெஷினுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரவேற்பு நன்றாக இருப்பதால் இந்த சேவையை பெங்களுருவில் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்ள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Bengaluru folks, how is this – Idli ATM! 🙂 #Technology pic.twitter.com/u9rpBaEteZ
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) October 14, 2022