இன்றைய ராசிபலன்……
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசுகாரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுனம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.
கடகம்
கடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.
சிம்மம்
சிம்மம்: இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
துலாம்
துலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
தனுசு
தனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் கடமையுணர்வுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.
மகரம்
மகரம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி வந்து போகும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
கும்பம்
கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
மீனம்
மீனம்: இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்குவரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.