இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீச்சு : மாட்டிக்கொண்டு துடியாய் துடித்த மாணவி.. பின் நடந்த விபரீதம்!!

277

சந்தோஷ்..

இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் காதல் வலை வீசும் ரோமியோக்களை நம்பி பெண்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவிகள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் எத்தனை முறை சொன்னாலும் கேட்க மறுத்து, காதலில் விழுந்து வாழ்க்கையைத் தொலைக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

அந்தவகையில் மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம் சிவகங்கை மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ்குமார் என்பவர் இன்ஸ்டாகிராமில் நட்பாகப் பழகி காதல் வலை விரித்துள்ளார்.

மாணவியின் ஆசையை தூண்டி அவரை நேரில் சந்தித்த சந்தோஷ், தனது டூவிலரில் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனிமையான இடம் ஒன்றில் வைத்து சந்தோஷ் குமார் , அந்த மாணவிக்கு பாலியல் கொடுமை செய்ததாகவும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்து கொண்டு சமூக வலைதளங்களில வெளியிட்டு விடுவதாக மி.ர.ட்டி மூன்று தடவைகளில் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.

திரும்பத் திரும்ப பணம் கேட்டதால் கொடுக்க மறுத்துள்ளார் அந்த மாணவி. பணம் தராததால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் , மாணவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை தனது நண்பரான மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ராகுல் மூலமாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பதிவிட்ட வீடியோவை மாணவியிடம் காட்டி மிரட்டி மீண்டும் பணம் கேட்டு விட்டு, பின்னர் அந்த வீடியோவை நீக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் நீக்கம் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாவதைக் கண்ட மாணவி விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய்த் தவித்துள்ளார். இதையடுத்து பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து விவரித்த மாணவி, இது குறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, இஸ்டாகிராம் கணக்கு மற்றும் செல்போன் நம்பர் மூலம் கல்லூரி மாணவர்களான சந்தோஷ், ராகுல் இருவரையும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகளைக் காதல் வலையில் வீழ்த்தி, அந்த பெண்ணின் ஒப்புதலுடன் அத்துமீறினால், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளதால் இளைஞர்கள் வீணாக வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.