இப்படியும் ஒரு ஆசையா?.. நிர்வாணமாக திருமணம் செய்த காதல் ஜோடி!!

912

நிர்வாணமாக திருமணம்

இத்தாலியில் காதல்ஜோடி புதுமையாக நிர்வாணமாக திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் வேலண்டின். இவர், ஆன்கா ஆர்சன் என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

இந்நிலையில், இவர்களின் காதலுக்கு இரு வீடுகளிலும் மறுப்பு தெரிவிக்காமல் திருமணத்திர்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
இருந்த போதிலும், காதல்ஜோடி ஒரு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. அதாவது, நிர்வாணமாக திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றியுள்ளது.

ஆனால், இதுகுறித்து வெளியில் சொல்லவும் தயங்கினர்.எனினும், ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து, தங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம், இது பற்றி தெரிவித்தனர். காதல் ஜோடியின் ஆசைக்கு, அவர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், இத்தாலியில் உள்ள ஒரு தீவுக்கு, நான்கு பேரும் சென்று அங்கு, இருவரும், நிர்வாண கோலத்தில் திருமணம் செய்துள்ளனர்.

திருமணத்துக்கு வந்திருந்த அவர்களது நண்பர்கள் இருவரும், நிர்வாண கோலத்திலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து, ஆன்கா ஆர்சன் கூறியதாவது: நாங்கள் இருவருமே, இயற்கையை ரசிப்பவர்கள், அதனால் தான், நிர்வாணமாக திருமணம் செய்ய விரும்பினோம்.

எங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே, அழைப்பு விடுத்தோம். இது, எங்கள் ஆசைக்காக செய்த திருமணம் இந்த ஆண்டு இறுதியில், எங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், முறைப்படி திருமணம் செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.