ஆபிரிக்கா கண்டம் இரண்டாக பிளவுபடவுள்ளதாக புவியியல் வல்லுனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கென்யா முதல் சூடான் வரை ஏற்பட்டுள்ள நிலப்பிளவு காரணமாக, ஆபிரிக்கா கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்கா அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் எனப்படும் தட்டுக்கள் வேகமாக அரிக்கப்பட்டு வருவதாலும், பூமியின் மேல்புறம் அதிக நீரோட்டம் காணப்படுவதாலும், பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் இத்தகைய மாற்றம் வருவதற்கு, பல லட்சம் ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் 10 ற்கும் மேற்பட்ட நாடுகள் தனி கண்டமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.