இரண்டு ஆண்களுடன் ஒன்றாக இணைந்து வாழும் இளம்பெண்: குழந்தை பெற விரும்பும் விசித்திர காதலர்கள்!

2397

ஜேர்மனியில் ஒரு பெண், இரண்டு ஆண்கள் என ஒன்றாக இணைந்து வாழும் முறையில் மூவர் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

ஜேர்மனியைச் சேர்ந்தவர் நடாலி(22). இவருக்கும் இவரது ஆண் நண்பர் யான்னிக்கிற்கும்(22) ஒரு விசித்திர ஆசை. அதாவது மூவர் ஒன்றாக இணைந்து உறவில் ஈடுபடும் Polyamory-யில் இவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள்.

இதற்காக கடந்த 2014ஆம் ஆண்டிலேயே மற்றொரு நபருடன் இணைந்து திருமணம் செய்யும் முடிவை எடுத்தனர். ஆனால், இவர்கள் தேடும் மூன்றாவது நபர் மட்டும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான், இரண்டு ஆண்டுகள் கழித்து மைக்கேல் பிலாம்(22) என்பவரை இவர்கள் சந்தித்துள்ளனர். அவருடன் நண்பர்களாக பழியுள்ளனர். ஆனால், தங்களது விருப்பம் குறித்து அவரிடம் கூற நடாலி முதலில் தயங்கியுள்ளார்.

எனினும், அடுத்தடுத்த சந்திப்புகளில் ஒரு வழியாக Polyamory முறையில் விருப்பம் உள்ளதை பிலாமிடம் நடாலி தெரிவித்துள்ளார். அதற்கு பிலாமும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மூவரும் தற்போது ஒன்றாக வசித்து வருகிறார்கள். மேலும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள்.

இதுதொடர்பாக நடாலி கூறுகையில், ‘மைக்கேலிடம் Polyamory உறவு குறித்து தெரிவித்தபோது, அவரும் நாங்கள் தேடும் நபர் என்பது தெரிய வந்தது. எங்கள் காதலுக்கு ஆண்டுதோறும் கொண்டாட தனிப்பட்ட நாள் கிடையாது. இதை ஒரு நீண்ட நிகழ்வாகவே காண்கிறோம்.

நானும், மைக்கேலும் Date செய்து பழகினோம். எங்கள் உறவு இப்போது நன்கு வளர துவங்கியுள்ளது. நாங்கள் மூவருமே சந்தோசமாக வாழ்ந்து வருகிறோம்.

இரவிலும் நாங்கள் மூவரும் சேர்ந்து ஒன்றாகவே வாழ்ந்து வரும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் நெருக்கம் அதிகம், பொறாமை சுத்தமாக இல்லை.

நான் ஒரு போதும் இந்த சமூகத்திற்காக வாழ விரும்பவில்லை. நான் எனது விருப்பம் மற்றும் ஆசைகளுக்காக, நான் விரும்புவதை வாழவே விரும்புகிறேன்.

இப்போது எங்கள் உறவின் அடுத்த கட்டமாக, நாங்கள் மூவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். மேலும், நாங்கள் இந்த உறவிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த இருவருமே என் குழந்தையின் தந்தையர்களாக இருப்பார்கள். நிச்சயம் இதில் யாரேனும் ஒருவர் மூலமாக தான் ஒரு குழந்தை பிறக்கும் என்று தெரியும். மேலும், குழந்தையின் Biological தந்தை யார் என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

ஏனெனில், குழந்தையின் எதிர்காலத்திற்கு இது அவசியம் என்பதாலும், இதனை நாங்கள் மறைக்க விரும்பவில்லை.

திருமணம் என்பது சத்தியம். அது ஒரு Commitment. எங்கள் உறவை யாராலும் தடுக்க முடியாது. இந்த திருமணத்திற்கு எங்கள் உறவினர்கள் அனைவரையும் அழைக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.