இரவு நேர கா வல் கடமையில் ஈடுபடும் கா வல்துறையினருக்கு €10 மில்லியன்!

366

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்…

நேற்று முந்தினம் (27/07/2020) இரவு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கா வல்நிலையங்களுக்கு தி டீர் விஜயம் மேற்கொண்டார்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் இணைந்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் அமைச்சர்களின் பிரதிநிதி Marlène Schiappa ஆகியோரும் பயணித்திருந்தனர்.

முதலில் பாரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள boulevard Bessières கா வல்நிலையத்துக்கு பயணித்தார். இரவு நேர பணிகளை மேற்கொள்ளும் BAC 75N அதிகாரிகளை சந்தித்தார்.

தவிர, கா வல்துறையினரின் பாரிஸ் தலைமை அதிகாரி Didier Lallement இனைச் சந்தித்தும் உரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, குறிப்பிடத்தக்க ஒரு சலுகையை வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி, இரவு நேர கடமையை மேற்கொள்ளும் கா வல்துறை அதிகாரிகளுக்கு ஊதியத்தை அதிகரிக்க உள்ளதாக அறிவித்தார். இதற்காக வருடத்துக்கு €10 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

இந்த சந்திப்பை அடுத்து, மக்ரோன் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள மத்திய கா வல்நிலையத்துக்கு பயணித்தார். அங்கும் சில அதிகாரிகளை சந்தித்து உரையாடினார்.