இருந்த ஒரே சொத்தும் கையை விட்டு போகுது…. இறுதி நேரத்தில் லொட்டரியில் அடித்த பெரிய அதிர்ஷ்டம்!!

1155

கேரளா….

கேரளாவில் கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி நோட்டீஸ் அனுப்பிய அடுத்த ஒரு மணி நேரத்தில் நபர் ஒருவருக்கு கூரையை பீய்த்து அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது.

பூக்குஞ்சு என்பவர் மீன் வியாபாரி ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கிய நிலையில் கடனை திரும்ப செலுத்த முடியாமல் பண நெருக்கடியில் தவித்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக வங்கி அவருக்கு இருந்த ஒரே சொத்தை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியது.

இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என அவர் யோசித்து கொண்டிருந்த போது பூக்குஞ்சுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய அவர் சகோதரர், பூக்குஞ்சு வாங்கிய லொட்டரி சீட்டிற்கு ரூ. 75 லட்சம் (இலங்கை மதிப்பில் ரூ. 3,33,90,768) பரிசு விழுந்ததாக கூறினார்.

இது அவர் வாங்கிய கடன் தொகையை விட பல மடங்கு அதிக பணமாகும். லொட்டரி டிக்கெட் வாங்குவதை பூக்குஞ்சு வாடிக்கையாக கொண்டிருந்தார், அன்றை தினம் 1 மணிக்கு தான் குறித்த லொட்டரி சீட்டை அவர் வாங்கியிருந்தார். என்றாவது நமக்கு அதிர்ஷ்டம் அடித்து பிரச்சனைகள் தீராதா என நினைத்தவருக்கு அவர் விரும்பியது நடந்துள்ளது.