இலங்கையில் உயிருடன் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்; இயற்கையின் எச்சரிக்கையா? மக்கள் மத்தியில் அச்சம்!!

353

திமிங்கிலங்கள்…………..

கொழும்பை அண்மித்த பாணந்துறை கடற்கரைப் பகுதியில் திரளான திமிங்கிலங்கள் கரையொதுங்கியிருப்பதால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார், இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர். கரையொதுங்கிய திமிங்கிலங்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 25 அடி நீளமுடையவை எனவும் குறிப்பிடப்படுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் திமிங்கலங்களை பார்வையிட மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர்.

இந்த நிலையில் திமிங்கிலங்கள் இவ்வாறு உயிருடன் கரையொதுங்கியிருப்பது இயற்கை அனர்த்தத்திற்கான எச்சரிக்கையா என அப்பிரதேச மக்களிடையே சந்தேக அலை ஏற்பட்டுள்ளது.