இலங்கையில் குப்பைகளில் தேங்கிக் கிடக்கும் உணவை தேடும் காட்டு யானைகள்! நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!

403

யானைகள்………..

இலங்கையின் ஒலுவில் உள்ள வன பகுதியில் யானைகள் சில தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உண்ணும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தர்மப்லான் திலக்சன், இந்த காட்சிகளை புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார்.

திலக்சன் யானைகள் குறித்து ஒரு நீண்ட ஆவணத்தினை தயார் செய்து வருகிறார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த படங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டினையும், அதன் காரணமாக யானைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் விளக்குகின்றது.

அம்பாரா மாவட்டத்தில் ஒலுவில் உள்ள வனப்பகுதியில் இந்த குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. காட்டு யானைகள் சில இந்த குப்பையில் தங்களுக்கான உணவினை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது போன்ற நடைமுறையானது வன உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

(Photo: Tharmaplan Tilaxan/Cover Images)
வன பரப்புகள் தொடர்ந்து சுருங்கி வருவதால் யானைகளின் வாழ்விடமும் மனித குடியிருப்புகளுக்கு மிக அருகில் வந்துள்ளது. தற்போது இந்த பகுதியில் 25-30 யானைகள் வாழ்ந்து வருகின்றது. சில நேரங்களில் உணவு தேடி யானைகள் வயல் வெளிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது தவிர்க்க இயலாததாக மாறி வருகின்றது.

பொதுவாக யானைகள் நாளொன்றுக்கு 30 கி.மீ வரை உணவு தேடி பயணத்தினை மேற்கொள்கின்றன. ஆனால், தற்போது இந்த காட்டு யானைகள் யதார்த்தத்திற்கு பழகிக்கொண்டுள்ளன.

இவ்வாறாக யானைகள் குப்பைகளில் தங்கள் உணவினை தேடுவதன் மூலம் செறிக்க முடியாத பாலிதீனை உட்கொள்ள வேண்டிய அ வலம் நேருகின்றது.

இறந்த யானையின் உடற்கூறாய்வில் பல முறை பாலிதீன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் குப்பைகளை சுற்றி வேலி என எவ்வித பா துகாப்பு ந டவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என திலக்சன் குறிப்பிட்டுள்ளார்.