இலங்கையில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய முட்டை வியாபாரி!!

329

முட்டை வியாபாரி..

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல் மாகாணத்தில் முழுமையான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் முட்டை விற்பனை செய்யும் வியாபாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தனது முட்டைக்காக பயனாளர்களிடம் பணம் பெற்றுக் கொள்ளும் போது ஒன்றரை மீற்றர் தூரத்தை கடைபிடிக்கும் வகையில் பிளாஸ்டிக் கூடைகள் இரண்டினை ஒன்றிணைத்து கம்பி ஒன்றை பயன்படுத்தி பெற்றுக் கொள்கின்றார்.

அவசியமான முட்டை அளவை தெரிவித்த பின்னர் அவர் குறித்த கம்பி ஊடாக பயனாளர்களுக்கு தூரத்தில் இருந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மிகவும் சுகாதார பாதுகாப்புடன் முட்டை விற்பனையில் ஈடுபடும் குறித்த முட்டை வியாபாரிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.