இளம்பெண் பரிதாபமாக பலி… கதறும் தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

265

விருதுநகர்….

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20). அவருடன் சரிதா (21) மனோரஞ்சனி (18) மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் குளிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அபிநயா, சரிதா, மனோரஞ்சனி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர்.

தகவல் அறிந்த கிராமத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமணைக்கு கொண்டு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, அபிநயா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும், சரிதா என்பவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், மனோரஞ்சனி என்பவருக்கு நுரையீரல் பகுதியில் நீர் புகுந்ததால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபிநயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.