மதபோதகர் செய்த…
தமிழகத்தில் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசிய மதபோதகரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு முடியகம்பை பகுதியில் பெதஸ்தா சபை உள்ளது. இங்கு அசோக் ஸ்டீபன், 58, என்பவர், மத போதகராக இருந்து வந்துள்ளார்.
இவர், இந்த சபைக்கு, ஜெபிக்க வரும் பெண்களிடம், ஆபாச வார்த்தைகள் பேசியும், கையை பிடித்து இழுத்தும் மானபங்கபடுத்தியதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
அதுமட்டுமின்றி, அசோக் ஸ்டீபன், இளம் பெண்களிடம் கனவில் வந்ததாகச் சொல்லி ஆபாச கதைகளை சொல்லும், ஆடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சில பெண்களை நீலகிரியின் பல இயற்கை சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று வீடியோக்கள் எடுத்ததும் தெரியவந்துள்ளது,
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அசோக் ஸ்டீபன், கார் கண்ணாடியை உடைத்தும், பெண்ணின் கையை பிடித்து இழுத்தும், மிரட்டல் விடுத்துள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள், நீலகிரி தர்ம அமைப்பு செயலாளர் ராமமூர்த்தி என்பவரின் மூலமாக கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து பொலிசார், மத போதகர் அசோக் ஸ்டீபனை கைது செய்து, குன்னுார் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தி, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.