இளம் பெண்ணை நம்பவைத்து கூட்டு பலாத்காரம் : பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

523

டெல்லி….

பெண்கள் நமது நாட்டின் கண்கள் என்று சொல்லப்படும் இந்தியாவில் பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது.. சில கயவர்கள் பாட்டி, மகள், சகோதரி, சிறுமி என பாகுபாடின்றி சீரழித்து வருகின்றனர்.

தற்போது, டெல்லியில் நடந்த கூட்டு பலாத்கார சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண்(வயது 24) மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். பெங்களூருவில் சஞ்சீவ் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரஜத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.

கடந்த 24ஆம் தேதி இருவரும் டின்னருக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். ரஜத் தான் அந்த பெண்ணை அந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் சாப்பிட்டுள்ளனர்.

இரவு நேரமாகிவிட்டதால், இங்கையே ஒரு ரூமில் தங்கி விட்டு காலையில் செல்லலாம் என்று ரஜத் கூறிருக்கிறார். இதற்கு நர்ஸும் சம்மதம் சொல்லவும், உடனடியாக ரூம் போடப்பட்டு, இருவருமே ஒன்றாக உள்ளே நுழைந்தனர்.

ஆனால். உள்ளே நுழைந்த நர்ஸுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ரூம் காலி ரூம் இல்லை என்றும்… அங்கு ஏற்கனவே 3 பேர் இருப்பதும் நர்ஸுக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவருமே ரஜத்தின் நண்பர்கள்.. யோகேஷ் குமார், தேவ் ஷரோய், ஷிவ் ராணா என்பது அவர்களின் பெயர்கள்.. அவர்களை கண்டதும் சுதாரித்து கொண்ட நர்ஸ் உடனே ரூமை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால், 4 பேரும் சேர்ந்து.. அந்த பெண்ணை மறித்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

அதன் பிறகு.. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போன அந்த பெண், எந்த பிரச்சனையும் செய்யாமல் ரூமை விட்டு வெளியேற வேண்டும் என முடிவு செய்தார். ஒருவழியாக அங்கிருந்து வெளியேறிய அந்த பெண்.. சஞ்சீவ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை 4 பேர் மாறி மாறி பலத்தகாரம் செய்ததாகவும், விடிகாலையில்தான் அங்கிருந்து தப்பித்ததாகவும் புகாரில் தெரிவித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பெண்ணை மருத்துவ செக்கப்புக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதியானது.

இதையடுத்து இந்த கூட்டு பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த 4 பேரும் தேசிய அளவிலான நீச்சல் வீரர்கள் எனவும், அதில் ரஜத் ட்ரெயினிங் எடுப்பதற்காக பெங்களூருக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகுது என்று தெரியவந்துள்ளது. மற்ற நண்பர்கள் பெங்களூரு வந்து ஒரு வாரமாகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.