இளவரசரின் உள்ளத்தில் இடம் கிடைத்தது, ஆனால் மக்களின் மனங்களில்?: கமீலா பார்க்கரின் கதை.

732

பிரித்தானிய மக்களின் மனங்களில் நிரந்தர இளவரசியாய் வீற்றிருக்கும் டயானாவின் இடத்தைப் பிடிப்பதற்காக கமீலா பார்க்கரும் இளவரசர் சார்லஸும் எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள், செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மக்களின் மனங்களில் இடம் கிடைத்ததா? விளக்குகிறது இந்த செய்தி.

காதலிலும் திருமணத்திலும் கமீலா பார்க்கரும் சார்லஸும் எடுக்காத திடமான முடிவுகள் எத்தனை பேரின் வாழ்வில் தொந்தரவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இளம் வயதில் பழகிய பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆளுக்கொரு பக்கம் திருமணம் செய்து கொண்டு, பின்னர் வாழ்க்கைத் துணைகளைத் தவிக்கவிட்டு மீண்டும் காதலைப் புதுப்பித்து, அதற்கு டயானாவின் காதலையும் கமீலாவின் திருமணத்தையும் பலி கொடுத்து… என்ன சாதிக்க நினைத்தார்கள் இருவரும்?

சார்லஸும் டயானாவும் பிரிந்ததும் மீண்டும் வாழ்வில் இணைய நினைத்த கமீலாவும் சார்லஸும் மக்களின் மனங்களில் இடம்பிடிக்க பல பெரிய திட்டங்களைத் தீட்டினார்கள்.


இளவரசியின் வாழ்வில் வந்த வில்லியாகத்தான் உலகம் கமீலா பார்க்கரைப் பார்த்தது.

இளவரசி டயானாவும் வெளிப்படியாகவே கமீலாவை குற்றம் சாட்டினார், ஆனாலும் வில்லி என்ற பெயரெடுத்த கமீலாவை மக்கள் முன் நல்லவளாகக் காட்டுவதற்காக சார்லஸ் பல திட்டங்களைத் தீட்டினார். இதற்காக Mark Bolland என்னும் ஒருவர் முழு நேரப் பணியாளராக அம்ர்த்தப்பட்டார்.

அவரது வேலையே கமீலாவின் வில்லி இமேஜை மாற்றுவதுதான், அந்த திட்டங்களின்படி கமீலாவைக் குறித்த புத்தகம் ஒன்று எழுதப்பட்டது.

அது கமீலாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தவேண்டும், பொது நிகழ்ச்சி ஒன்றில் சார்லஸும் கமீலாவும் கலந்துகொண்டு அந்த புத்தகத்தை வெளியிடவேண்டும், இதுதான் திட்டம்.
ஆனால் அதற்குள் ஒரு செய்தி வந்தது, இளவரசி டயானா விபத்தில் இறந்துபோனார் என்னும் செய்திதான் அது.

இனி திட்டங்கள் தேவையில்லை, புத்தகங்கள் வெளியிடவேண்டாம், டயானாவின் இடம்தான் காலியாகிவிட்டதே.

சார்லஸ் மீதும் கமீலா மீதும் மக்களுடைய வெறுப்பு இன்னும் அதிகமாயிற்று, சார்லஸின் மகன்களும் வெளிப்படையாகவே அவர் மீது வெறுப்பைக் காட்டினார்கள்.

மெதுவாக சார்லஸும் கமீலாவும் பொது இடங்களில் சேர்ந்து வலம் வரத்தொடங்கினார்கள்.

பொதுமக்கள் மத்தியில் தலை காட்டத் தொடங்கினார் கமீலா, தொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். விருந்துகளுக்கு இருவரும் சேர்ந்து சென்றார்கள். பல நாடுகளிலும் கமீலாவை பிரபலப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.
பின்னர் 2005 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலி கமீலாவைத் திருமணம் செய்து கொண்டார் சார்லஸ்.

இவ்வளவுக்குப் பின்னும் இருவராலும் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடிந்ததா?

மக்கள் கணக்கெடுப்பு ஒன்றில் அதிகம் வெறுக்கப்படும் மனிதராக தெர்ந்தெடுக்கபட்டார் சர்லஸ்.

சார்லஸுக்கே இந்த கதி என்றால் கமீலாவுக்கு?

சமிபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சார்லஸுடன் கமீலாவும் கலந்து கொண்டார், அந்த விருந்தின் முக்கிய விருந்தினரான மகாராணி கமீலாவிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

இன்று வரை மக்களின் மனதில் இளவரசியாக மட்டுமல்ல ஒரு ராணியாகவே சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்ட இளவரசி டயானாவின் இடத்தை யாராலும் அசைக்கக்கூட முடியாது.