இளைஞனை கொன்று ஓடையில் புதைத்த நண்பர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

348

கன்னியாகுமரி….

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குலசேகரம் அருகே அயக்கோடு ஊரைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் லிபின் ராஜா. இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த சூழலில், கடந்த 4-ம் தேதி இரவு கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு லிபின் ராஜா வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் லிபின் ராஜாவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் லிபின் ராஜாவுக்கும், புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பழவூர் பகுதியில் லிபின் ராஜாவின் சடலம் சாலையோரமாக ஓடையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த லிபின் ராஜாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், லிபின் ராஜா கொலை சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நண்பர்களான எபின், ஸ்டீபன்ராஜ் மற்றும் லிபின் ராஜாவுக்கு இடையே அவ்வப்போது பிரச்னை எழுந்துள்ளது.

இப்படி உள்ள சூழலில்,  கடந்த 4-ம் தேதி இவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது லிபின் ராஜாவை அடித்து கொலை செய்து இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சாலையோரம் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.