உடன்பிறந்த தம்பியை ஓட ஓட கத்தியால் குத்திய அண்ணன் : அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!!

796

அறந்தாங்கி அருகே குடும்பத்தகராறு காரணமாக உடன் பிறந்த தம்பியை, அண்ணனே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி மற்றும் கணேசன் (38). உடன்பிறந்த சகோதரர்களான இருவருமே ஒரே உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளனர். ஒரே இடத்தில் வேலை செய்தாலும், குடும்பத்தகராறு காரணமாக இருவருக்குமிடையே பேச்சு வார்த்தை கிடையாது.

இந்த நிலையில் வழக்கம்போல இன்றும் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றவே, வெள்ளைச்சாமி அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரை விரட்டி சென்ற வெள்ளைச்சாமி, நடுரோட்டில் ஓட ஓட விட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த துயரசம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அனைவரும், பயத்தில் அலறியடித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.