உதடு வெடிக்கின்றதா? இது எதன் அறிகுறி தெரியுமா?

1291

உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது.தொடங்கிவிட்ட இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு பாம்கள் தடவியும் கூட இந்த பிரச்சனை தீரவில்லையா?

உதடுகளில் ஏற்படும் வறட்சி அல்லது அடிக்கடி காய்ந்து வெடித்து போவதற்கு நம் உடலின் வெப்பநிலை உயர்ந்துள்ளதே காரணமாகும்.உதடுகள் காய்ந்து வறட்சியாக இருக்கும் போது நம்மில் சிலர் நாவினால், உதடுகளை ஈரமாக்கிக் கொள்வார்கள். அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது.

உதடுகளின் வறட்சியை போக்குவது எப்படி?வறட்சியை போக்குவதற்கு நமக்கு கை கொடுக்க தான் இயற்கையான பொருள் இருக்கிறது அல்லவா? என்னவென்று யோசிக்கிறீர்களா?அது தான் தேங்காய் எண்ணெய். அதிலுள்ள பல்வேறு வகையான உடல்நல பயன்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு.

பொதுவாகவே நம் உடலில் வெட்டுக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனே தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவ சொல்லுவார்கள். அதற்கு காரணம் அதிலுள்ள குணப்படுத்தும் ஆற்றலே.வெண்ணெய்யில் சிறிதளவு எடுத்து அடிக்கடி சாப்பிடலாம் அல்லது ஒவ்வொரு நாள் இரவில் உறங்கும் முன் வெண்ணெயில் சிறிதளவு எடுத்து உதட்டில் தடவிக் கொள்ளலாம்.

உதடு வறட்சிக்கு அதிகப்படியான உடல் உஷ்ணமே காரணம். எனவே உஷ்ணத்தை குறைக்கும் மோரை அடிக்கடி பருகி வந்தாலே உதடு காய்ந்து போவது படிப்படியாக குறையும்.தினமும் நம் உடலுக்கு போதிய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உதடு வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.ரோஜாவின் இதழ்களை பச்சை பாலில் ஒரு மணிநேரம் ஊற வைத்து அதை பேஸ்ட் செய்து, உதட்டில் தடவி வந்தால், உதட்டில் வெடிப்புகள் வராது.

தினமும் இரவில் படுக்கும் முன் மில்க் க்ரீமை உதட்டில் தடவி வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். உதட்டில் உள்ள வறட்சியை நீக்க வெள்ளரிக்காயை கொண்டு தினமும் உதட்டில் மசாஜ் செய்து வர வேண்டும். கற்றாழையின் ஜெல்லை உதட்டின் மீது தடவி வந்தால், உதட்டில் வெடிப்புகள் வராது.