திருவள்ளூர்…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை தாலுகாவை சேர்ந்த அய்யனேரி கிராமத்தில் டைலர் கடை நடத்தி வந்தவர் மங்களா (வயது37). மங்களாவின் கணவர் தமிழ்மணி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மங்களா மீது சந்தேகம் கொண்ட அவரது கணவர் தமிழ்மணி சந்தேகப்பட்டு டைலர் கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மங்களாவை கத்தியால் சதக், சதக் என்று கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பியோடினார்.
அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மங்களா இவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மங்களா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவது, கொலை செய்யப்பட்ட மங்களா அவரது கணவர் தமிழ்மணி ஆகியோர் ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் இவர்களுக்கு சரவணன் என்ற 14 வயதில் ஒரு மகனும், பிரவீன் என்ற 13 மகனும் உள்ளனர்.
விவாகரத்து கோரி அவ்வப்போது மங்களா அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சந்தேகம் காரணமாக அடிக்கடி மங்களாவுடன் கணவர் தமிழ் மணிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று கடைக்கு சென்ற தமிழ்மணி மனைவி மங்களாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கத்தியால் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த தமிழ் மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிய மனைவியை சந்தேகத்தின் பெயரில் கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.