கத்ரினா…
பிரபல நடிகை கத்ரினா கைப் தன்னை விட 5 வயது கு றைவான நடிகரான விக்கி கவுசாலுவை திருமணம் செய்ய இருக்கின்றார்.
வரும் டிசம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், இருவரும் மௌனம் காத்து வருகின்றனர்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்ட் ஓட்டலில் வைத்து இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் பிறந்த கத்ரினா கைப்பிற்கு 5 சகோதரிகள் உள்ளனர்.
இவரது தாயார் பிரிட்டனைச் சேர்ந்தவர். தந்தை காஷ்மீரை சேர்ந்தவர். பூம் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான இவர்,
தற்போது தற்போதும் படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இந்நிலையில் இவருக்கும்,
பிரபல நடிகர் விக்கி கவுசாலுக்கும் டிசம்பர் மாதம் 3 நாள் திருமணம் கொண்டாட்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கத்ரினா கைப் 1983ம் ஆண்டும், நடிகர் விக்கி கவுசால் 1988ம் ஆண்டும் பிறந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே 5 வயது இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது.