ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார்.
அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.