என் நிலை யாருக்கும் வரவேண்டாம்: இளம் விதவை விடுத்த எச்சரிக்கை!!

1345

அயர்லாந்தை சேர்ந்த இளம் பெண்ணின் கணவர் ஆஸ்துமா நோய் முற்றி உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி அது குறித்து பேசியுள்ளார்.

ஸ்டீபன் லேலாண்ட்ட் (33) என்பவருக்கு இளம் வயது முதலே ஆஸ்துமா நோய் இருந்துள்ளது. ஆனால் அதை ஸ்டீபன் பெரிதுப்படுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு லவுரா என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளும் பிறந்தனர். பின்னர் ஆஸ்துமா நோய் முற்றி கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டீபன் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து ஸ்டீபன் மனைவி லவுராவும், இரண்டு குழந்தைகளும் தனிமையில் வாடி வருகிறார்கள்.

லவுரா கூறுகையில், ஆஸ்துமா நோய் குறித்து எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒருவருக்கு அந்நோய் வந்தால் சரியான திட்டமிடுதலுடன் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

என் கணவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளாததாலேயே உயிரிழந்துவிட்டார், என் நிலை யாருக்கும் வரக்கூடாது என கூறியுள்ளார்.

இதனிடையில் பிரித்தானியாவில் 5.4 மில்லியன் நபர்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் மூன்று மில்லியன் பேர் ஆஸ்துமாவுக்கான சரியான சிகிச்சைகளை எடுத்து கொள்ளாமல் உள்ளதும் சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.