என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டனர் : காதலி கொலை வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளி பேட்டி!!

1131

காதலி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளியான Santoro என்பவன் தனது வாழ்க்கையே நாசமாகி விட்டதாக பேட்டி அளித்திருக்கிறான்.

கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் உள்ள லேன் கோவ் ஆற்றில் Cecilia Haddad 38 எனும் பெண்மணி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.இவர் கண்டெடுக்கப்பட்ட அடுத்த நாளே இவரது காதலன் Santaro பிரேசில் நாட்டிற்கு தப்பியோடி விட்டான்.

அதனால் இவனை சந்தேகித்த போலீசார் இவனை ஒரு சர்வதேச குற்றவாளி என்று அறிவித்துள்ளனர். தேடப்படும் குற்றவாளியான santaro தற்போது ரியோ டி ஜெனீரோவில் தனது குடும்பத்தாரோடு வசித்து வருகிறான்.

இவனை கைது செய்ய சர்வதேசத்தில் உள்ள காவல்துறையினரும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த குற்றவாளி தனது வாழ்க்கையே இந்த கைது உத்தரவால் நாசமாகி விட்டதாக தெரிவித்திருக்கிறார். தன் மேல் கைது வாரண்ட் இருப்பது தனக்கு தெரியும் என்று கூறும் santaro அங்கு வந்தால் மக்கள் என்னை அடித்து துன்புறுத்துவார்கள் என்று கூறுகிறார்.

தான் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாகவும் ஒரு பக்க கதையை கேட்டு மக்கள் தன் மேல் கோபமாக இருப்பதாகவும் போன் மூலம் மிரட்டுவதாகவும் இவர் கூறியிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட Cecilia Haddad மிக சிறந்த படிப்பாளி மற்றும் அறிவாளி என்று கூறப்படுகிறது. சிறந்த தொழித்தவராகவும் இருந்த ஹடாட் santario வை பள்ளி படிப்பின் போது நட்பாக சந்தித்து பழகியிருக்கிறார், அதன் பின் பல வருடங்களுக்கு பின் இருவருக்கும் திருமணமான நிலையில் மீண்டும் இவர்கள் நட்பு தொடர்ந்திருக்கிறது.

அந்த சமயத்தில்தான் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் குடும்பத்தார் தெரிவித்தனர். ஹடாட்சடலமாக மிதந்த ஆற்றில் பூங்கொத்துகள் வீசி அவரது குடும்பத்தார் அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச முறையில் தேடப்படும் குற்றவாளி என்பதாலும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாலும் இந்த கொலை குற்றம் விடயமாக பிரேசில் போலீசார் விரைவில் santaro வை கைது செய்வார்கள் என்று அறியப்படுகிறது.