விஜய் சேதுபதி…
விஜய் சேதுபதி ரசிகர்கள் இல்லாத தெருக்களே தமிழகத்தில் இருக்காது. விஜய், அஜித் வரிசையில் முன்னணி நடிகர் பட்டியலில் இல்லாவிட்டாலும் விஜய் சேதுபதி படங்களுக்கென அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்துக்கு படம் இவர்காட்டும் புதுமையே இதற்கு காரணம்.
சீதக்காதி படத்தில் 70 வயது முதியவராகவும், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாகவும் நடித்தார் விஜய் சேதுபதி. எந்த ரசிகரைப் பார்த்தாலும் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுப்பது, கஷ்டத்தில் இருப்பவர்களை தேடிப்போய் உதவுவது என விஜய் சேதுபதி நிறையவே சமூக சேவையும் செய்து வருகின்றார்.
சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதற்குமுன் குமரன் சன் ஆப் மகாலெட்சுமி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.
பீட்சாவுக்கு பின் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர், டூப்பர் ஹிட் அடிக்க முக்கிய நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் விஜய் சேதுபதி.
எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், நீண்ட இடைவெளிக்குப் பின்பு நடிக்க வந்த நதியா ஆகியோர் நடிப்பு வெகுவாகப் பேசவும், கவனிக்கவும் பட்டது.
ஆனால் இதேபடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்ததை பலரும் கவனிக்கக் கூட இல்லை.
அந்தப் படத்தில் கூட்டத்தில் ஒருவராக ஓரத்தில் நிற்பார் விஜய் சேதுபதி. இப்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.